நுரையீரல் பாதிப்புகளும் “டிபி’ நோயும்.
A report by S Nagarathinam – a Lilly MDR TB fellow.
கடந்த ஆண்டு சர்வதேச நுரையீரல் ஆண்டாக கடைபிடிக்கப்பட்டது. உலகமெங்கும் கோடிக்கணக்கானோர் நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நோய்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச நுரையீரல் ஆண்டு கடைபிடிக்கப்பட்டது.
இந்த விஷயத்தில் இந்தியாவிலோ அல்லது சர்வதேச அளவிலோ, மீடியா மிகப்பெரும் கவனத்தை எடுத்துக் கொண்டன என்று கூறிவிட முடியாது. சர்வதேச ஆண்டுகள் அறிவிக்கப்பட்டதுடன் நின்று விடாமல், மீடியாவில் செய்திகள் வருவதற்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையே இந்த ஆண்டு நமக்கு பாடம் கற்பித்திருக்கிறது.
காசநோய், ஆஸ்துமா, நிமோனியா, இன்புளூயன்ஸா, நுரையீரல் கேன்சர், சுவாசப்பிரச்னை உள்ளிட்ட நோய்களால் ஏராளமானோர் அவதிப்படுகின்றனர். லட்கணக்கானோரை இந்நோய்கள் பலிகொண்டும் வருகின்றன.
நோய்களைப் பற்றி அறிந்து கொள்வதும், அவற்றுக்கு முன்னதாக சிகிச்சை தொடங்குவதுமே இந்நோய்களிலிருந்து நாம் காப்பாற்றப்படுவதற்கான ஒரே வழி. ஆஸ்துமா சுவாசப்பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. மூச்சுத்திணறல், இளைப்பு ஆகியன இதன் அறிகுறிகள்.
புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் கேன்சர் மற்றும் காசநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நுரையீரலில் வளரும் கேன்சர் செல்கள் நுரையீரல் பிரச்னைக்கு காரணமாக அமைகின்றன.
2004ல் மட்டும் சர்வதேச அளவில் 13லட்சம்பேர் இந்நோய்க்கு பலியானார்கள். பாக்டீரியா, வைரஸ் தொற்றால் ஏற்படும் நுரையீரல் வீக்கம், நிமோனியா நோய்க்கு காரணமாக அமைகிறது. சில வகை இன்புளூயன்ஸா காய்ச்சலும் நிமோனியாவை ஏற்படுத்துகின்றன.
காசநோய் “மைகோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்’ எனும் பாக்டீரியாவால் பரவுகிறது பொதுவாக இது நுரையீரலைத் தாக்கும். எனினும் உடலின் இதர பாகங்களிலும் இது நோயை ஏற்படுத்துக்கூடியது.
தொடர்ச்சியான இருமல் சளியில் ரத்தம், காய்ச்சல் உள்ளிட்டவை காசநோய்க்கான அறிகுறிகள் காச நோய் பாக்டீரியா உலகில் மூன்றில் ஒருவர் உடலில் இருந்து வருகிறது. இது உடலில் உள் உறைநிலையில் உள்ளது. ஒருவரது நோய் எதிர்ப்புத் திறன் குறையும் போது, இந்த பாக்டீரியங்கள்
பல்கிப் பெருகி காசநோயை ஏற்படுத்துகின்றன. காச நோயை கண்டறிந்து முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டால், அதிலிருந்து எளிதில் தப்பிவிடலாம். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் விடுவது உயிருக்கே ஆபத்தானது.
பல்வேறு மருந்துகளை எதிர்க்கும் திறனை காசநோய் பாக்டீரியா பெற்றுவிட்டால்,முதல் கட்ட மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இந்தியாவிலும் சீனாவிலும் இவ்வகையான நோயாளிகள் காணப்படுகின்றனர்.
இதுகுறித்து, சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் எம்.எம். சாமி தெரிவித்தபோது மதுப்பழக்கம் உள்ளவர்கள் விட்டு விட்டு மாத்திரைகளை எடுத்தக்கொள்வதால், அவர்களிடம் காசநோய்க் கிருமிகள் பல்வேறு மருந்துகளை எதிர்ப்புத் திறனை பெற்றுவிடுகின்றன. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் காசநோய் கிருமிகள் மருந்து எதிர்ப்புத் திறன் பெற்றுவிடுவதால் இவர்களுக்கு இரண்டாம் கட்ட திவாய்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குறுகிய காலத்துக்கான நேரடி கண்காணிப்பு சிகிச்சை(டாட்ஸ்) வழியாக வழங்கப்படும் மாத்திரைகள் தொண்டுள்ளம் கொண்டவர்கள் வழியாகவும் நோயாளிக்கு நேரடி கண்காணிப்பின கீழ் அளிக்கப்படுகிறது. நோயாளி தொடர்ந்து மாத்திரை எடுத்து வருகிறாரா என்பதை அவர் கவனித்து வருவார். குடும்பத்தினரிடம் இம்மாத்திரைகளை அளித்தால், சில நேரங்களில் ஏற்படும் சிறிய பக்கவிளைவுகளை கருத்தில் கொண்டோ, அல்லது வேறு குடும்ப காரணங்களுக்காகவோ அவர்கள் கொடுக்காமல் இருக்க வாய்ப்பு உண்டு. ஆகவே காசநோய் சிகிச்சை எடுத்து வருபவர்களில் ஏறத்தாழ 85 சதவீதம் பேர் முழுவதுமாக குணமடைந்து வருகின்றனர்,” என்றார்.
சென்னை காசநோய் ஆராய்ச்சி மையத்தில் 1970களில் நடந்த நேரடி கண்காணிப்பு சிகிச்சை முறை உலக சுகாதார நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படும். சிகிச்சையாக இருக்கிறது. சர்வதேச அளவில் வெற்றி பெற்ற இம்முறைதான் அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனம் 1993ம் ஆண்டை சர்வதேச காசநோய் அவசர ஆண்டாக கடைபிடித்தது. “ஸ்டாப் டிபி பார்ட்னர்ஷிப்’ நிறுவனம் 2006 முதல் 2015ம் ஆண்டு வரை ஒரு கோடியே 40 லட்சம் பேரை காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோளை அறிவித்தது.
நுரையீரல் நோய்களை அறிந்து கொண்டு, முறையான சிகிச்சையை முன்னதாகத் தொடங்கினால் இந்நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ளலாம்.
– தி லில்லி எம்.டி.ஆர். “டிபி” ரீட் மீடியா பெல்லோஷிப்.
im suffering from tb how to rescue the desiese more tips give me…
nithi
March 26, 2013 at 10:21 am
Kindly go immediately to the nearest government hospital. This is the best place you can go to for getting yourself treated for TB.
JournalistsAgainstTB
March 28, 2013 at 11:40 am